மாவட்டம்

காணும் பொங்கலை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசு

Jan 17, 2020
காணும் பொங்கலை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் கொண்டாட்டம்

Jan 15, 2020
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மியூசிக் சேர், பானை உடைத்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும், கோலப்போட்டிகளும் இடம்பெற்றன. சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்ட கோலப்போட்டியில், சிறந்த கோலங்களை சுற்றுலாப் பயணிகளே தேர்வு செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பூங்கா நிர்வாகம் சார்பில், மரக் கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.  

தென்காசியில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த மாற்றுத் திறனாளி கைது

Jan 15, 2020
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை அடுத்துள்ள புளியங்குடியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான பாலசுப்பிரமணியன் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத் தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக புகார் எழுந்தது.

காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டி

Jan 15, 2020
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றன. காவல்துறையில் பணியாற்றும் ஆண் காவலர்களுக்கு கிரிக்கெட் போட்டியும், பெண் காவலர்களுக்கு த்ரோ பால் போட்டிகளும் நடைப்பெற்றன.

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள் பங்கேற்பு

Jan 15, 2020
மதுரை மாவட்டம்,  அவனியாபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டி, காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.