சென்னையில் வார நாட்களில் கூடுதலாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் 500 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், 300 இடங்களில் வாகன சோதனையிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.