சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற, யுவராஜ் சிங், கனடாவில் நடைபெறும் குளோபல் 20 ஓவர் தொடரின் இரண்டாவது சீசனில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
1981ல் பிறந்த இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். மிதவேக இடது கை பந்து வீச்சாளராகவும் இவர் விளங்கினார். இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் இவர் ஒருவர்.