"அண்ணா பல்கலை" - சிபிஐக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

Aug 09, 2018 03:09 PM 344

அண்ணா பல்கலைக் கழக மாணவர்களின் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று, உ.யர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முறையாக விசாரித்து வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

Comment

Successfully posted