மீண்டும் மழை பெய்யும்!

Jul 14, 2018 05:43 PM 590

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், தற்போது அங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்  மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடல் பகுதியையொட்டிய இடங்களில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted