விஜய்க்கு ஆதரவு அளித்த விஜய்சேதுபதி

Jul 19, 2018 04:35 PM 1000

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடித்தவாறு போஸ் கொடுத்திருந்ததால் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விஜய்க்கு ஆதரவாக டி.ராஜேந்தர் உட்பட சிலர் குரல் கொடுத்தனர். இந்நிலையில், ஜூங்கா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். விஜய் மட்டும்தான் படங்களில் புகைப்பிடிக்கிறாரா? மற்ற நடிகர்கள் புகைப்பிடிப்பதில்லையா என கேட்டார். இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர நினைப்பவர்கள், சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Comment

Successfully posted

Super User

test comment


Super User

சென்னை: பாடல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, திரிஷா நயன்தாரா இந்த இரண்டுபேரில் யார் அழகு என்ற கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.