மேலும் 10 சிறை கைதிகள் இன்று விடுதலை

Jul 25, 2018 10:53 AM 640

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி முதற்கட்டமாக, புழல் சிறையிலிருந்து கடந்த மாதம் 6ஆம் தேதி 67 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 2ஆம் கட்டமாக 52 கைதிகளும், 3வது கட்டமாக 47 கைதிகளும் விடுதலை  செய்யப்பட்டனர். தற்போது, 9வது கட்டமாக இன்று புழல் சிறையிலிருந்து 10 கைதிகள்  விடுதலை செய்யப்பட உள்ளனர். கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted

Super User

welcome