வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெரும் - முதலமைச்சர் நம்பிக்கை

Jul 16, 2018 01:04 PM 1650

விருதுநகரில் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் கல்வி திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதில், கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 3 கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சேவை விருதையும், 4 மருத்துவமனைகளுக்கு மருத்துவ சேவை விருதையும் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், பெருந்தலைவர் காமராஜரின் கொள்கையை பின்பற்றி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அதிமுக அரசு வழங்கி வருகிறது என்று பெருமிதத்தோடு தெரிவித்தார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி காலத்தில் 21 சதவீதமாகவ இருந்த உயர்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 46 புள்ளி 94 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களில் அமோக வெற்றி பெரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Comment

Successfully posted