அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Jul 16, 2018 11:21 AM 1659

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்தும்  விவாதிக்கப்பட்டது. அதிமுக கட்சியின் தொண்டர்கள் 1½ கோடி என்ற நிலையில், இந்த எண்ணிக்கையை 2 கோடியாக அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும், உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

Comment

Successfully posted