HSC Result: +2 மதிப்பெண் சான்றிதழ்களுக்கான தேதி அறிவிப்பு

Jul 19, 2021 07:07 AM 1142

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படுகின்றன. கொரோனா பரவல் தீவிரத்தால் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 8 லட்சத்து 6ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை, இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை ஜூலை 22ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இணையதள முகவரி : tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in 

மேலும் வரும் 22 ந் தேதி மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related items

Comment

Successfully posted