2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Jul 13, 2018 03:06 PM 703

தமிழகத்தில் பல இடங்களில் இருநாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களிலும் அவ்வப்போது பெய்து வரும் மழை, இனி தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted