2ஜி வழக்கு - புதிய நீதிபதி விசாரிப்பார் என அறிவிப்பு!

Nov 30, 2020 04:59 PM 2274

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை நாளை முதல் நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி, ஆ. ராசா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி இன்று ஓய்வு பெறுவதால் நாளை முதல் வழக்கை நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted