அம்பத்தூரில் பெண்ணை தாக்கி 3 சவரன் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது

Dec 12, 2019 08:59 PM 391

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பத்தூர், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பேச்சியம்மாளைத் தாக்கி அவரிடமிருந்த 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, மொபட்டில் ஒரு பெண்ணும் ஆணும் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அயனாவரத்தைச் சேர்ந்த ரேவதி என்கிற பெண்ணைக் கைது செய்து விசாரித்தபோது அவர் தனது மைத்துனருடன் சேர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான ரேவதி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுக் கடனில் மொபட் மற்றும் கார் வாங்கியுள்ளார். மாதத் தவணை கட்ட முடியாமல் காலையில் சிற்றுண்டி உணவகம் நடத்தியும், மாலையில் மைத்துனருடன் சென்று சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரேவதியிடமிருந்து 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரது மைத்துனரைத் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted