நரபலி கொடுக்கப்பட்ட 3 வயது குழந்தை - புதுக்கோட்டையில் பெண் மந்திரவாதி கைது

Nov 05, 2018 02:12 PM 308

புதுக்கோட்டையில் மூன்று வயது பெண் குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாந்திரீக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெள்ளைச்சாமி. கடந்த மாதம் 26-ம் தேதி இவரது மூன்று வயது மகள் ஷாலினி செம்முனி கோயில் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாந்திரீகம் செய்து வரும் சிங்காரம் என்பவரது மனைவி சின்னபிள்ளை, ஷாலினியை கொலை செய்தது தெரியவந்தது. மந்திர சக்தியை அதிகரிப்பதற்காக நரபலி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சின்னபிள்ளையுடன் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து போலீசார் சின்னப்பிள்ளையை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted