டெல்லி தீ விபத்தில் 43 பேர் பலி: கட்டிட உரிமையாளர் கைது

Dec 08, 2019 08:10 PM 725

டெல்லியில் அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்து சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி ஜான்சி சாலையின் அனாஜ் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடி கட்டிடத்தில் பற்றி தீ கொளுந்துவிட்டு எரிந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், கட்டிடத்திற்குள் இருந்த 43 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரான ரேஹான் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comment

Successfully posted