மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழா

Jan 18, 2022 05:28 PM 1214

மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தாதது ஏன்..? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாளையொட்டி, மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தாதது ஏன்..? என கேள்வி எழுப்பினார்.

 

Comment

Successfully posted