ராணுவ தளவாட உற்பத்தியில் 74 சதவிகித அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி - பிரதமர் மோடி!!

Aug 27, 2020 06:37 PM 1365

ராணுவ தளவாடங்களின் உற்பத்தியில் 74 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆத்ம நிர்பார் பாரத் கருத்தரங்கில் காணொலி வாயிலாக பேசிய அவர், பல ஆண்டுகளாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்ததாகவும், சுதந்திரம் கிடைத்த உடன் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ராணுவ தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted