75 அடியை தொட்டது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

Jul 13, 2018 05:08 PM 764

கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 54 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தொட்டது. 

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 10 அடியை தாண்டியது.

124 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டி உள்ளது. இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75 புள்ளி மூன்று 6 கனஅடியாகவும், நீர் இருப்பு 37 புள்ளி 4 எட்டு டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், விரைவில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted