தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது!

May 23, 2020 08:10 PM 730

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 710 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 49 பேர் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 759 பேரில் 429 பேர் ஆண்கள், 330 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted