தமிழக அரசிற்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்திய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார்

Dec 13, 2019 07:18 AM 165

மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஐஜிஎஸ்டி நிலுவை தொகை மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு ஆகியவற்றை தமிழக அரசிற்கு உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார்..


நாட்டிலேயே ஜிஎஸ்டியை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக குறிப்பிட்டார். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 1 லட்சத்து 57 ஆயிரத்து 167 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தமிழகம் மூலமாக கிடைக்கப் பெற்றிருப்பதாக குறிப்பிட்டார். இருந்த போதிலும் ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் ஐஜிஎஸ்டி நிலுவையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.. தமிழக அரசு பல முறை வேண்டுகோள் விடுத்தும், ஐஜிஎஸ்டி நிலுவை தொகையாக 4 ஆயிரத்து 72 கோடி ரூபாயும், ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான 3 ஆயிரத்து 236 கோடி ரூபாயும் இன்னும் கிடைக்கப்பெறாமல் இருப்பதாக குறிப்பிட்டார். ஆகவே உடனடியாக இந்த தொகையை வழங்கினால், தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை அமல்படுத்த ஏதுவாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்..AIADMK member Raveendranath Kumar urges Center to pay GST compensation to Tamil Nadu

Comment

Successfully posted