அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

Dec 08, 2021 03:28 PM 2185

சென்னையில் இருந்து சேலம் சென்ற அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானார். அதன்பிறகு சென்னையில் இருந்து சேலம் சென்ற அவருக்கு, விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

 

Comment

Successfully posted