சட்டப்பேரவைக்கு வயது 52ஆ, 84ஆ - திமுகவின் நூதனத்தைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Aug 03, 2021 12:54 PM 4680

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திமுக அரசு நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ள நிலையில், சட்டப்பேரவைக்கு 52 வயது என கருணாநிதி, 1989ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பது பழமொழி. அப்பா கணக்கு 84 ஆண்டு, மகன் கணக்கு நூற்றாண்டு... இதுதான் புதுமொழி என்று, நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளும்படி, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பழைய கணக்கு பரபரப்பை கிளப்பியுள்ளது.

நேற்று, தமிழக சட்டப்பேரவைக்கு திமுக அரசு நூற்றாண்டு விழா கொண்டாடியது.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, “சட்டப்பேரவைக்கு இன்று 52 வயது ஆகிறது” என்று அறிக்கை விட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கருணாநிதி சொன்ன கணக்குப்படி பார்த்தால் தமிழக சட்டப்பேரவையின் வயது 84 ஆண்டுகளே.

உளறிக் கொட்டுவதில் உயர்மதிப்பெண் வாங்கும் திமுக, கணக்கு விஷயத்திலும் புது கட்டம் கட்டியிருப்பது, நெட்டிசன்களுக்கு கலாய் மெட்டீரியல் ஆகியுள்ளது.

Comment

Successfully posted