அமெரிக்க தலைவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய மர்ம நபர் கைது !

Oct 27, 2018 08:14 AM 417

அமெரிக்க தலைவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய மர்ம நபரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஜனநாயக மற்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டிரம்ப் எதிர்ப்பாளர்களான ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், 12-க்கும் அதிகமான தலைவர்களுக்கு மர்ம வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன. அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் விசாரணை நடத்தி வந்த அமெரிக்க ஐக்கிய புலனாய்வு துறையினர் நியூயார்க் நகரில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை கைது செய்தனர்.

இந்த தகவலை அமெரிக்க நீதித்துறை செய்தி தொடர்பாளர் உறுதி செய்ததையடுத்து குற்றவாளியை ஃபுளோரிடா மாகணத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Comment

Successfully posted