பஞ்சாபில் பயங்கர ரயில் விபத்து - 50க்கும் மேற்பட்டோர் பேர் பலி? நேரடி அதிர்ச்சி வீடியோ

Oct 19, 2018 08:04 PM 811

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள Choura Bazar பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

 

image

தசாரவையொட்டி ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண சென்ற சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் தண்டவாளம் அருகே நின்றுள்ளனர்.

 


 

அப்போது ரயில் வந்துள்ளது. பட்டாசு சத்தத்தால், அந்த இடமே அதிர்ந்த நிலையில், ரயில் வரும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை என கூறப்படுகிறது.

image

இந்நிலையில் கூட்டத்தின் மீது ரயில் மோதியது. இதில் உடல்கள் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. ஆங்காங்கே சிதறிய உடல்களை போலீசார் கைப்பற்றினர். அவர்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் கதறி அழுதனர். 50 பேர் வரை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

image

 

Comment

Successfully posted

Super User

இதுதான் விதி...இராவண வதம் கொடுமை.இறை தண்டிக்கிறது.