வரும் 14ஆம் திமுக அவசர செயற்குழு கூட்டம்

Aug 10, 2018 04:15 PM 777

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இந்நிலையில் தற்போது திமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 14 ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை பத்து மணிக்கு செயற்குழு நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.. திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடரந்து நடைபெறும் முதல் செயறுகுழு கூட்டமாகும். இந்த கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் நியமிப்பதற்காக செயற்குழு உறுப்பினர்களிடம் அனுமதி பெறப்படும் என கூறப்படுகிறது. இதனை தொடரந்து நடைபெறும் பொதுகுழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் பெயர் அறிவிக்கப்படுவார்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted