அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே மோதல் - 23 பேர் உயிரிழப்பு

Sep 28, 2020 09:21 AM 681

அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே நடைபெற்ற எல்லைச் சண்டையில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே மோதல் போக்கு வலுத்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பர குற்றம்சாட்டுகளை கூறி வருகிறது. இந்த நிலையில், நகோர்னா - கராபக் எல்லையில், அஜர்பைஜான் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு அர்மேனியா படைகளும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.

இந்த தாக்குதலில், பொதுமக்கள் உட்பட 23 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அஜர்பைஜான் நாட்டின் பீரங்கி ஒன்று சுட்டு வீழ்த்தப்படும் வீடியோ காட்சியை, அர்மேனியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனால், நகோர்னா - கராபக் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Comment

Successfully posted