தாளவாடியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல்: சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்

Jun 16, 2019 09:09 AM 73

ஈரோடு தாளவாடி பகுதியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தாளவாடி சுற்று வட்டார பகுதிகளுக்கு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் பி.எஸ்.என்.எல் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது சாம்ராஜ்நகர் அருகே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நான்கு நாட்களாக செல்போன் சேவை மற்றும் இணையதள சேவை முற்றிலுமாக துண்டிக்கபட்டுள்ளது. இணைய தள சேவை இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கிகள்,அரசு அலுவலகங்களின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்னையை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

Comment

Successfully posted