தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி

Oct 11, 2018 10:46 PM 632

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. ஏற்கனவே தொடர் தோல்விகளை  தழுவிய தமிழ் தலைவாஸ் அணிக்கு தற்போது மரண அடி விழுந்துள்ளது.

ஏற்கனவே 3 தொடர் தோல்விகளை அந்த அணி சந்தித்துள்ள நிலையில், 4 வது தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

27க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 9 புள்ளிகள் பெற்று அந்த அணியில் மனின்தர் சிங் கலக்கியுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், (பீகார்) யுபி யோதா(உத்தரப்பிரதேசம்) அணியை வீழ்த்தியது.

விறுவிறுப்பான கடைசி கட்டத்தில், 43 க்கு 41 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி வெற்றி வாகை சூடியது.

 

 

 

 

Comment

Successfully posted