சமூக விலகல் குறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் விழிப்புணர்வு

Mar 25, 2020 08:42 AM 2043

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, பாலிவுட் திரை நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க, தனிமைப்படுத்துதல் மட்டுமே ஒரே தீர்வு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திரை நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், கரீஷ்மா கபூர், மலைகா அரோரா, மலிகா பாத் உள்ளிட்டோர் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர். வீட்டில் அவர்கள் தனிமையில் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல், நடிகை டாப்சி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நமது பாதுகாப்பை தவிர வேறெதுவும் தற்போது முக்கியமில்லை. பிரதமர் அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாலிவுட் நடிகர் அக்சய் குமார், மக்களுக்கு ஊரடங்கு என்பது என்னவென்று ஏன் புரியவில்லை என காட்டத்துடன் கேள்வி எழுப்பினார். மேலும், மக்களுக்கு என்னாகிவிட்டது என வினவியுள்ள அவர், ஊரடங்கு என்பது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதாகும் என தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted