10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டும் திமுக எம்.எல்.ஏ வின் சகோதரர்

Jun 28, 2021 10:24 PM 1350

பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் இளைஞர் ஒருவரை 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின், வலது கரமாக வலம் வருபவர் திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்சமாம். நகராட்சியில் இவருடைய தலையீடு இன்றி எந்த வேலையும் கையெழுத்து ஆகாது என்பது எழுதப்படாத சட்டம் என்று அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் இளம் பொறியாளர் ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக கட்டடம் கட்டியிருந்ததாகவும், அதற்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த இன்சாமம் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாகவும், தரவில்லை எனில் விபரீதமாகி விடும் என்று மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

 

Comment

Successfully posted