ஆந்திராவில் பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கியது!

May 21, 2020 04:21 PM 675

ஆந்திராவில் பேருந்து சேவைகளை மாநில போக்குவரத்துக்கு கழகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ஊரடங்கு நான்காம் கட்டமாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திராவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலத்திற்குள் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட அளவிலான பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணா மாவட்டத்தில் 38 வழித்தடங்களில் 106 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநில போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted