புதிய அசல் ஆதார் அட்டையை பெற ஆன்லைன் மூலம் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்

Jan 17, 2019 01:04 PM 271

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் புதிய அசல் ஆதார் அட்டையை 50 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி, அரசு இ-சேவை மையங்கள், ஆயிரத்து 400 வங்கிக் கிளைகள், மற்றும் அஞ்சலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஆதார் அட்டை சேதமடைந்தாலோ அல்லது தொலைந்து விட்டாலோ, புதிய அசல் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புதிய அசல் ஆதார் அட்டையை பெற  www.uidai.gov.in என்ற இணையதளத்தில் 50 ரூபாய் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பித்தால், ஆதார் அட்டையை வீட்டில் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குறைகள் இருப்பின், பின்னாட்களில் சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted