கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : குற்றவாளி கைது

Dec 05, 2019 01:51 PM 271

கோவை சீரநாயக்கன் பாளையத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் 26-ஆம் தேதி நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சென்ற, 11ஆம் வகுப்பு மாணவியை, மணிகண்டன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோரை ஆர்.எஸ். புரம் மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவரது நண்பரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted