சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் - மலையாள நடிகர் கொல்லம் துளசி சர்ச்சை பேச்சு

Oct 13, 2018 07:06 PM 447

சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட உள்ளது.

Comment

Successfully posted