இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு நிதி- மத்திய அரசு ஒப்புதல்

Aug 20, 2019 06:55 PM 89

கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகள் பாதித்த மூன்று மாநிலங்களுக்கு 4,432 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட ஒடிசா, கர்நாடகா மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு 4,432 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக 3,338 கோடி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதிகள் அனைத்தும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted