அண்ணா திமுக செயற்குழு கூட்டம்- தீர்மானங்கள் நிறைவேற்றம்

Dec 01, 2021 03:06 PM 2044

சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அண்ணா திமுக செயற்குழு கூட்டத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட மகத்தான மக்கள் இயக்கமாம் அண்ணா திமுக பொன்விழா கொண்டாட்டங்களை நாடு நகரமெங்கும், பட்டி தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாட தொண்டர்களுக்கு அன்பு அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில், அண்ணா திமுக கூட்டணி 75 இடங்களில் வெற்ற பெறும் வகையில் உழைத்திட்ட கழக முன்னணியினருக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டு தெரிவித்தும்; தோழமை கட்சியினருக்கு நன்றி தெரிவித்தும்.

image

மழை, வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து ஈடுபட கழக தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அண்ணா திமுகவினர் கடுமையாக உழைக்கவும், திமுகவின் முறைகேடுகளை தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தியும்.


 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் வழியில், அண்ணா திமுகவை கட்டிக் காத்து, ஒற்றுமையை பேணி, எதிர்கால தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன....

Comment

Successfully posted