வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி

Sep 10, 2019 04:47 AM 1387

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 28-ஆம் தேதி முதலமைச்சர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் உள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்த பல்வேறு புரிந்துணார்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர், ஏராளமான முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் பெற்று, தனது வெற்றிகரமான வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று அதிகாலை தாயகம் திரும்பினார். 13 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comment

Successfully posted

Super User

welcome..chief minister of Tamilnadu K.Pazhanisamy ...vazhga AmmA in pugal...vazharga A.I.A.D.M.K....