பிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை!

Nov 23, 2020 10:05 AM 2579

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். இதே போல், தநோய் தொற்று குறைந்த மாநிலங்களில் தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து எந்த வகையில் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Comment

Successfully posted