ரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்!

Aug 06, 2020 09:49 PM 739

மதுரையில் 304 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் 31 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 6 துறைகளில் 304 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.. இதே போன்று 8 துறைகளில் 21 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆட்சியர் வினய், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

Comment

Successfully posted