கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு!!

Aug 11, 2020 07:28 PM 1051

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்துக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்குமாறு வேளாண் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களது கோரிக்கையை ஏற்று கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 12ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 9ம் தேதி வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீர்திறப்பால் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்மேலாண்மை மூலம் உயர் மகசூல் பெறவேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 

Comment

Successfully posted