ஹாங்காங்கிற்கான சிறப்பு வர்த்தக சலுகைகளை நீக்க சீனா முடிவு!

May 28, 2020 08:21 AM 13617

சீனாவிடம் இருந்து முழு சுதந்திரம் கோரி, ஹாங்காங்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர சீனா திட்டமிட்டு வருகிறது. ஹாங்காங்கிற்கான சிறப்பு வர்த்தக சலுகைகளை நீக்கவும் சீனா முடிவு செய்துள்ளது. இவற்றை குறிப்பிட்டு ஹாங்காங்கை இனி மேல் சீனாவிலிருந்து தன்னாட்சியாக கருத முடியாது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவின் சிறப்பு வர்த்தக சலுகைகள் ஹாங்காங்கிற்கு கிடைக்காது என அமெரிக்க வர்த்தக காங்கிரஸ் அமைப்புக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். அண்மையில், சீனா தனது புதிய சட்டத்தை அமல்படுத்தினால், ஒரு நிதி மையமாக செயல்படுவதில் ஹாங்காங்கிற்கு ஆபத்து ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Comment

Successfully posted