இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருபவர்களை கண்காணிக்க குழு - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!

Jul 09, 2020 10:41 AM 617

இ-பாஸ் இல்லாமல் மதுரைக்கு வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், கொரோனா பரவலை தடுக்க அரசு நெறிமுறைகளை வகுத்தாலும், பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை வெல்லமுடியுமென தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வீரராக இருந்தாலும் கொரோனாவிடம் எச்சரிக்கை உணர்வோடு தான் இருக்கவேண்டுமெ கூறிய அமைச்சர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மதுரையில் உள்ள கிராமங்களுக்கு வருபவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted