வைரலாகும் கேரளா பாய்ஸ் வீடியோ!! - நடிகர் சூர்யா டிவிட்டரில் வாழ்த்து

Jul 27, 2021 01:07 PM 6742

சூர்யா நடித்த ‘அயன்’ படத்தின் சண்டைக் காட்சிகளை, இளைஞர்கள் சிலர் மறு உருவாக்கம் செய்து மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

மறைந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, தமன்னா, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான ‘அயன்’ திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சியை, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளனர்.image

இணையத்தை கலக்கி வரும் இந்த காணொலியை கண்டு ரசித்த சூர்யா, இளைஞர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

 

Comment

Successfully posted