தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67ஆக உயர்வு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!!

Mar 30, 2020 05:16 PM 672

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கொரோனா பரவல் தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

 

Comment

Successfully posted