பெட்ரோல் பங்க் ரகளை சம்பவம் : 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Jul 23, 2019 03:26 PM 96

பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு தாம்பரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், ஆலப்பாக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 8 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த காட்சியானது சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்த நிலையில் அந்த 8 பேரும் நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுக்க விசாரிக்க பீர்க்கன்காரணை காவல் துறையினர் தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அவர்கள் 8 பேரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Comment

Successfully posted