இந்திய கம்யூ. புதிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு

Jul 21, 2019 06:16 PM 110

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்த சுதாகர் ரெட்டி உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பொதுச் செயலாளராக அக்கட்சியின் தேசிய செயலாளரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ராஜா தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted