போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!

Jan 12, 2021 09:41 AM 11934

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதுடன், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பேரூராட்சியில் திமுக நிர்வாகியான தங்கமாங்கனி, அவரது ஆதரவாளர் பல்க்ராஜா ஆகியோர், பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்க யாரும் வராததால், தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு பணத்தை கொடுத்து அழைத்து வந்தனர்.

மேலும், இந்த போராட்டத்தின்போது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Comment

Successfully posted