சலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்!!!

May 27, 2020 08:06 PM 718

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சலூன்கடை வைத்திருப்பவர் மீது, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் தாக்குதல் நடத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. மலையம் பாளையத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர், கணபதிபாளையத்தில் சலூன் கடை நடத்திவரும் நிலையில், அவரது கடை முன்பு, தி.மு.க.வினர் பேனர் வைத்ததாகக் கூறப்படுகிறது. தனது கடையை திறக்க வந்தபோது, கடை முன்பு இருந்த பேனரை அகற்றியதாகவும், இதனால் திருப்பூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் சேமசுந்தரம் தன்னை வீட்டிற்கு வரவழைத்து கடுமையதான தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் சேமசுந்தரம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted