சக கட்சிக்காரரையே கம்பியால் தாக்கிய தி.மு.க முன்னாள் கவுன்சிலர்!

Sep 19, 2020 04:26 PM 480

கேபிள் டிவி உரிமையாளரை, ஆட்கள் வைத்து தாக்கிய தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியனுக்கும் இடையே தொழில் போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுப்பிரமணியன் சில நபர்களை வைத்துக்கொண்டு மாரியப்பனை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியம் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழில்போட்டி காரணமாக ஒரே கட்சியைச் சேர்ந்தவரை சுப்பிரமணியன் ஆள் வைத்து தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted