”தேர்தலின்போது பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக” - ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்

Sep 18, 2021 10:58 AM 606

தேர்தலுக்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்ஆர்.பி. உதயகுமார், அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் 100 சதவீதம் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து திமுக, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted